பிரபல இளம் நடிகர் மீது பண மோசடி சென்னை காவல் ஆணையரிடம் புகார் ?*
மறைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வா ‘பாணா காத்தாடி’, ‘பரதேசி’, ‘ஈட்டி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் ‘குருதி ஆட்டம்’, ‘ஒத்தைக்கு ஒத்தை’ ஆகிய திரைப்படங்கள் நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகி வருகின்றன.
இந்நிலையில் எக்ஸட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் வி.மதியழகன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் அதர்வா மீது புகார் அளித்துள்ளார்.
அதில், ‘மின்னல் வீரன்’ என்ற படத்தில் நடிக்க அதர்வா ஒப்பந்தமானதாகவும், ஆனால் ஒப்பந்தப்படி படம் நடித்துத் தராமல் அதர்வா ஏமாற்றியதால் இதுவரை ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.