பிரபல நடிகரின் மனைவியிடம் தாதா சாகேப் விருது கொடுத்த கவர்னர் தமிழிசை!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு சமீபத்தில் ’தாதா சாகிப் பால்கே தெற்கு’விருது அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அவர் ‘பாரத் அனு நேனு என்ற திரைப்படத்தில் முதலமைச்சர் கேரக்டரில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது

இதனையடுத்து தெலுங்கானா மாநில புதிய கவர்னராக சமீபத்தில் பதவி ஏற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இந்த விருதுகளை வழங்கும் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் தாதா சாகிப் பால்கே விருதை தெலுங்கு நடிகர்
மகேஷ்பாபு நேரில் பெற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் எதிர்பாராத வகையில் நடிகர் மகேஷ்பாபு படப்பிடிப்பு ஒன்றில் பிஸியாக இருந்ததால் அவரால் வரமுடியவில்லை. இதனை அடுத்து மகேஷ்பாபுவின் மனைவி இந்த விருதினை மகேஷ்பாபு சார்பில் கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார் 

கொரட்டாலா சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு, கைரா அத்வானி நடிப்பில் உருவான இந்த படம் ரூ.65 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு, ரூ.225 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் தமிழ் டப்பிங் படமும் தமிழகத்தில் நல்ல வசூலை பெற்றது