பிரபல நடிகருக்கு எதிராக போராட்டம் – 200 நபர்கள் கைது.

சமீபத்தில் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி, ஒரு இணைய விற்பனை நிறுவன விளம்பரத்தில் நடித்திருந்தார். இது இணையத்தில் பலசரக்கு பொருளை விற்கும் நிறுவனம். இந்த விளம்பர படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருப்பதற்கு வியாபாரிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு வணிகர் சங்க பேரமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 200 வணிகர்களை காவல்துறையினர் ⛓கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!