பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நலம் குறித்து அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் தகவல் அளித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் அறிகுறிகளுடன் சென்னையில் அமிஞ்சிக்கரையிலுள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று நேற்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் எனது தந்தை எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு  மோசமாக இல்லை.

நலமாகவே இருக்கிறார் என்று எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.பி. சரண் கூறியிருக்கிறார்.