பிரபுதேவா இயக்கும் ‘டபாங் 3’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

நடிகர், நடன இயக்குநர் , இயக்குநர் என பல்வேறு கலைகளில் ஈடுபட்டு வருபவர் பிரபுதேவா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். சமீபகாலமாக இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு இந்தி படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளார். ‘டபாங் 3’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் சல்மான்கான் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையின் தேர்வு நடைபெற்று வருகிறது.