பிரம்மாண்ட வெளியீட்டிற்கு தயாரான ‘பக்ரீத்’!

அறிமுக இயக்குனர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் வசுந்த்ரா நடிப்பில் உருவாகியுள்ளது ‘பக்ரீத்’.

இப்படத்தினை எம் எஸ் முருகராஜ் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பையும் பெற்றது.

இப்படத்தினை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் வெளியிடவிருக்கிறார்.

ஆகஸ்ட் 23ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ஏரியா விநியோகஸ்தரர்களால் இப்படம் பெரிதும் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.