பிரான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘பரியேறும் பெருமாள்’

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் திரைக்கு வந்த பிறகும் வெளிநாடுகளில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுகிறது. இதுகுறித்து இந்த படத்தின் இயக்குநர் கூறியதாவது “பரியேறும் பெருமாள் படம் வெளியாகி பல மாதங்களுக்குப்பிறகு இவ்விழாவில் திரையிடப்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.