பி.எம் நரேந்திர மோடி’ படத்தை வெளியிட இடைக்கால தடை

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு, விவேக் ஓபராய் நடிப்பில் ‘பி.எம் நரேந்திர மோடி’ என்ற தலைப்பில் உருவானது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், ஏப்ரல் 5-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் நேரத்தில் இந்த படம் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் முடியும் வரை இந்த படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், என்.டி ராமாராவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘என்.டி.ஆர்’ படத்திற்கும் தேர்தல் ஆணையம் இடைக்கால தடை விதித்துள்ளது.