புதிய அவதாரம் எடுக்கும் நடிகர் மோகன்லால்
இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் உள்ளவர் மலையாள நடிகர் மோகன்லால். அவரது நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த ‘லூசிபர்‘ படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. ஒரு நடிகராக ஐந்து முறை தேசிய விருதும், பத்மஸ்ரீ உள்பட பல பெருமைக்குரிய விருதுகளும் பெற்ற மோகன்லால், விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் மோகன்லால் இயக்கும் முதல் படத்துக்கு “ப்ரோஸ் கார்டியன் ஆப் காமா“ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக இருப்பதாக மோகன்லால் தனது இணையதள வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார் மேலும், இந்த படம் குறித்த மற்ற விவரங்களை விரைவில் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Mohanlal spotted in #Ittimani look. pic.twitter.com/7rgxVkgmp6
— Film77square (@film77square) April 23, 2019