புதிய அவதாரம் எடுக்கும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் தற்போது ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரஜினியின் ‘தர்பார்’ படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நகைச்சுவை நடிகர், நாயகன் என அவதாரம் எடுதத யோகி பாபு புதிய அவதாரம் ஒன்றை எடுக்க உள்ளார். அதன்படி, அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கும் புதிய படத்தில் நகைச்சுவை பகுதிக்கு யோகி பாபு வசனம் எழுத்தவுள்ளார். இவர் ஏற்கனவே லொள்ளுசபாவிற்கு வசனம் எழுதியுள்ளதால் இந்த படத்திற்கு இவர் எழுதும் வசனம் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து முழு நீள நகைச்சுவை படத்தை யோகிபாபு இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.