‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன்…?

இந்நிலையில், மாநகரம் உட்பட பல படங்களில் நடித்த நடிகர் சந்தீப் கிஷண் “பல வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் ‘புதுப்பேட்டை’ படம் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாக இருக்கிறது” என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

அந்த ட்வீட்டை ஷேர் செய்த செல்வராகவன் அவருக்கு நன்றியும் தெரிவித்தார்.

அந்த ட்வீட்டுக்குக் கீழே, ‘மாஸ்டர் பீஸ், ‘புதுப்பேட்டை’ இரண்டாம் பாகத்துக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்’ என ஒரு ரசிகர் ட்வீட் பண்ணியிருந்தார். அதற்கு, “நிச்சயம் நேரம் வரும் ப்ரோ. இது கண்டிப்பாக நடக்கும்” என பதிலளித்துள்ளார் செல்வராகவன்.

செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு ரிலீஸான ‘புதுப்பேட்டை’ படத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்க, சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்தனர்.

இந்தப் படம், வெளியாகி 12 வருடங்களுக்கு மேல் ஆனநிலையில் அதன் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் பண்ணியிருக்கிறார் செல்வராகவன்.