புது மாப்பிள்ளை நடிகர் யோகி பாபுக்கு தங்க செயின் பரிசாக கொடுத்த ‘கர்ணன்’ நடிகர் தனுஷ்.

புது மாப்பிள்ளை நடிகர் யோகி பாபுக்கு தங்க செயின் பரிசாக கொடுத்த ‘கர்ணன்’ நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘கர்ணன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்க வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.

நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க, நட்டி என்கிற நடரஜான், லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் கர்ணன் சூட்டிங்கில் வந்து கலந்துக் கொண்டார்.

அப்போது தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டிக்கொண்டாடி யோகி பாபுவிற்கு தங்க செயினை நடிகர் தனுஷ் பரிசளித்தார் .