புறநானூற்று பாடல் வரியை தன் படத்தலைப்பாக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

கதாநாயகன், வில்லன், கெஸ்ட் ரோல் என எந்த கேரக்டர் என்றாலும் தயங்காமல் நடித்து பெயர் வாங்கி விடுபவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

இவர் நடித்துள்ள சங்கத்தமிழன் படம் நவம்பர் 15ல் வெளியாகிறது.

இயக்குனர் ஜெனநாதன் இயக்கும் லாபம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 33வது படத்தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் கிருஷ்ணா ரோக்நாத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரித்து வருகிறார்.

இந்த படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும் வாக்கியம் சங்கக்கால புலவர் கனியன் பூங்குன்றனாரின் புறநானூற்று பாடலில் உள்ள வார்த்தையாகும்.