Monday, September 27
Shadow

பெட்ரோமாக்ஸ் திரை விமர்சனம்

நடிப்பு – தமன்னா, முனிஷ்காந்த், காளிவெங்கட். சத்யன் மற்றும் பலர்

தயாரிப்பு – ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்

இயக்கம் – ரோகின் வெங்கடேசன்

இசை – ஜிப்ரான்

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

வெளியான தேதி – 11 அக்டோபர் 2019

ரேட்டிங் – 2.75/5

தமிழ் திரைப்பட உலகில் வெளிவந்துள்ள மற்றுமொரு ஹாரர் படம் தான் இந்த பெட்ரோமாக்ஸ். தெலுங்கில் வெளிவந்த ஆனந்தோ பிரம்மா படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த படம். பயமுறுத்தும் பேய்ப் படங்களுக்கு மத்தியில் அவ்வப்போது சிரிக்க வைக்கும் பேய்ப் படங்களும் வருகின்றன. அந்த வரிசையில் சிரிக்கவும் வைக்க வந்துள்ள படம்தான் இந்த பெட்ரோமாக்ஸ் ரீமேக் திரைப்படம் என்பதால் இயக்குனர் ரோகின் வெங்கடேசனுக்கு அதிகமாக வேலைகள் இருந்திருக்காது. தெலுங்கில் உள்ள ஒரிஜினல்தானா திரைப்படத்தை சிதைக்காமல் அப்படியே கொடுத்திருந்தாலே போதும்.

கேரளா வெள்ளத்தில் தந்தை, தாய் இறந்த காரணத்தால் தன்னுடைய சொந்த வீட்டை விற்க புறப்பட்டு சென்னைக்கு வருகிறார் மலேசியாவில் வசிக்கும் நடிகர் பிரேம். அந்த வீட்டில் பேய் இருப்பதாக கதை கட்டிவிட்டு அதைக் குறைந்த விலைக்கு வாங்க திட்டமிடுகிறார் மைம் கோபி. ஆனால், அந்த வீட்டில் பேய் இல்லை என்பதை நிரூபீத்துக் காட்ட முனிஷ்காந்த், பிரேமுக்கு உதவி செய்ய வருகிறார். உடன் காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணகுமார் ஆகியோருடன் அந்த வீட்டிற்கு சென்று நான்கு நாட்கள் தங்கி பேய் இல்லை என்பதைப் நம்ப வைக்க முயற்சிக்கிறார். அந்த வீட்டில் கதாநாயகி தமன்னா, அவருடைய அப்பா, அவர்களது வீட்டு சமையல்காரர், அவருடைய மகள் ஆகியோர் பேயாக இருக்கிறார்கள். அவர்கள் முனிஷ்காந்த்தையும் அவரது ஆட்களையும் விரட்ட முயற்சிக்கிறார்கள். அவர்கள் ஏன் அதைச் செய்கிறார்கள், அந்த வீட்டில் அவர்கள் பேயாக இருப்பது ஏன் என்பதற்கான விடைதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.

கதாநாயகி தமன்னாவிடம் ஒரு வாரம் கால்ஷீட் வாங்கியிருப்பார்கள் போலிருக்கிறது. சில பல காட்சிகளில் வந்து பயமுறுத்திவிட்டுச் செல்கிறார். கதாநாயகி தமன்னாவை எல்லாம் பேயாகப் பார்த்து யார் பயப்படப் போகிறார்கள். சில காட்சிகளில் அழகு தமன்னாவாக வந்து ஆடிவிட்டு, பாடிவிட்டு அவரது கடமையை முடித்திருக்கிறார். கதாநாயகி தமன்னாவும் இந்தப் படத்தில் இருக்கிறார், அவ்வளவுதான். அவர்தான் கதாநாயகி என்பதெல்லாம் விளம்பரத்திற்காக மட்டுமே. இருக்கலாம்.

இந்த திரைப்படத்தின் கதாநாயகன் முனிஷ்காந்த் தான். ஏனென்றால் அவர்தான் அதிகமாக வசனம் பேசுகிறார். அதிகமான காட்சிகளில் வருகிறார் அவருக்கடுத்து நல்லவர் போல் நடிக்கும் வில்லன் நடிகர் பிரேம்.

Read Also  ஸ்பாட் விமர்சனம்

முனிஷ்காந்த் அதிகமாக ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்தாலும் காளி வெங்கட், சத்யன் ஆகியோரை விட திருச்சி சரவணகுமார் மிக நன்றாக ரசிகர்களை சிரிக்க வைத்து இருக்கிறார். ரசிகர்கள் மனதில் பதிந்தது மட்டுமல்லாமல் கைத்தட்டல்களை அள்ளிக் கொள்கிறார். அவரது மிமிக்ரி நகைச்சுவைக் காட்சிகள் சுவாரசியமாக அமைந்து சிரிக்க வைத்திருக்கிறான் சரவணகுமார்.

இடைவேளைக்குப் பின் முனிஷ்காந்த், காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணகுமார் கூட்டணிக்கும் தமன்னா தலைமையிலான கூட்டணிக்கும் நடக்கும் பேய் – மனிதன் ஆட்டத்தில்தான் கலகலப்பு அதிகம். பேய்களையே நொந்து போக வைக்கிறது முனிஷ்காந்த் கூட்டணி. அந்தக் காட்சிகள்தான் இந்த படத்தைக் காப்பாற்றுகின்றன.

ஒரு பேய்ப் படத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகச் செய்திருக்கிறார். இயக்குனர் ரோகின் வெங்கடேசன்

ஒரே ஒரு வீட்டுக்குள் நடக்கும் பேய்க் கதைகளை இன்னும் எத்தனை படங்களில்தான் பார்ப்பதோ ?. இடைவேளை வரை இந்த திரைப்படத்தில் சிறப்பாக எதுவும் சொல்லும்படி ஒன்றுமேயில்லை. கொஞ்சம் பொறுமையாகக் காத்திருந்தால் மட்டுமே இடைவேளைக்குப் பின் ரசித்துவிட்டு வரலாம். இந்த திரைப்படத்திற்கு எதற்கு பெட்ரோமாக்ஸ் எனப் பெயர் வைத்தார்கள் என்றே தெரியவில்லை.

பெட்ரோமாக்ஸ் – இந்த திரைப்படத்தில் வெளிச்சம் கம்மியாக உள்ளது

CLOSE
CLOSE