பெண்கள் உரிமைக்காக போராடும் 2 ஆம் பாரதியே; வைரலாகும் அஜித்குமார் போஸ்டர்

ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்து நேர் கொண்ட பார்வை படப்பெயரில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியிடுகின்றனர்.

அஜித்குமார் நடித்துள்ள இப்படத்தை போனிகபூர் தயாரிக்க , எச் வினோத் இயக்கியுள்ளார்.

இன்று வெளியாகிவுள்ள இப்படத்தை வரவேற்கும் விதமாக அஜித்குமார் ரசிகர்கள் விதம் விதமாக போஸ்டர்கள் அடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்ட அஜித்குமார் ரசிகர்கள் பெண் உரிமைக்காக போராடவரும் எங்களின் இரண்டாம் பாரதியாரே என வாசகம் கொண்ட போஸ்டரை அடித்து மாவட்டம் தோறும் ஒட்டியுள்ளனர்.