பெண் நிதியமைச்சருக்கு பிரபல நடிகை பாராட்டு

இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் ஆக நேற்று நிர்மலா சீதாராமன் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். இவருக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சிம்பு, தனுஷ் படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான ரம்யா என்ற திவ்யா ஸ்பாந்தனா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது நிதியமைச்சராகவும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.