பேசத் தெரியாமல் பேசுகிறார் சூர்யா – அமைச்சர் கடம்பூர் ராஜூ
நடிகர் சிவகுமார் குடும்பத்தின் சார்பில் அகரம் பவுண்டேசன் விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் +2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசளித்து மகிழ்ந்தனர் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி.
நடிகர் சூர்யா பேசும் போது…
ஒரே ஒரு ஆசிரியர் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்து இருப்பது சரி அல்ல. ஒரு ஆசிரியர் உள்ள பள்ளியை மூடினால் மாணவர்கள் எங்கே செல்வார்கள்.
சமமான கல்வியை கொடுக்காமல் கல்வி தரத்தை எப்படி உயர்த்த முடியும்.
ஆரம்ப கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்க கூடாது. பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும்.
5ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தினால் இடை நிற்றல் அதிகரிக்கும். 6.5 கோடி மாணவர்கள் பள்ளிபடிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர் இல்லை. என்று ஆவேசமாக பேசினார் சூர்யா.
சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக மாறியுள்ளது.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் கடுமையாக சூர்யாவை சாடியிருந்தனர்.
இந்த நிலையில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும். அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார். நன்கு தெரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம்.” என கடம்பூர் ராஜூ காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.