பேட்மேன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்க வேண்டும் – அருணாச்சலம் முருகானந்தம்
பெண்களுக்காக மலிவு விலை நாப்கின் தயாரித்து பத்மஸ்ரீ விருது பெற்றவர் கோவையை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம். இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து ‘பேட்மேன்’ என்ற தலைப்பில், பால்கி இயக்கத்தில் திரைப்படம் உருவானது. இதில் அருணாசலம் முருகானந்தம் கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படம் தேசிய விருதை வென்றுள்ளது. இது குறித்து பேட்டி அளித்த அவர், ‘பேட்மேன்’ படம் தமிழ் மொழியில் படமாக்கும் போது நடிகர் நடிகர் தனுஷ் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.