பேய்களின் காதலை சேர்த்து வைக்கும் யோகி பாபு

யோகி பாபு, நட்ராஜ், மனீஷா உள்ளிட்ட பலர் நடிப்பில், மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் ‘சண்டிமுனி’ என்ற படம் உருவாகிவருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சாம்ஸ், ஆர்த்தி, வாசுவிக்ரம், ‌ஷபிபாபு மற்றும் யோகி பாபு ஆகியோரின் நடிப்பில் ‘பியார்’ என்ற படத்தை மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கி வருகிறார். திகில் நிறைந்த கதைக்களத்தை கொண்டு உருவாகவிருக்கும் ‘பியார்’ படத்தில் யோகி பாபு இரண்டு பேய் காதலர்களை சேர்த்து வைக்கிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் முதல் நடைபெறவுள்ளது.