பேய் மாமா திரை விமர்சனம் ரேட்டிங் –1.75 /5
நடிகர் நடிகைகள் – யோகி பாபு, மாளவிகா மேனன், எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கோவை சரளா,
மற்றும் பலர்.
தயாரிப்பு – பாக்கியம் சினிமாஸ்.
இயக்கம் – ஷக்தி சிதம்பரம்
ஒளிப்பதிவு –எம்.வி.பன்னீர்செல்வம்
படத்தொகுப்பு – ..ப்ரீதம்
இசை – ராஜ் ஆர்யன்
திரைப்படம் வெளியான தேதி – 24 செப்டம்பர் 2021
ரேட்டிங் –1.75 /5
சில பல நகைச்சுவைப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஷக்தி சிதம்பரம்
ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்த பேய் மாமா திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
பல வருடங்களுக்கு முன்பு காமெடி என்று ரசிர்கள் சிரித்ததை இந்தக் கால ரசிகர்கள் சிரிக்க மாட்டார்கள் என்பதை இயக்குனர் சக்தி சிதம்பரம் புரிந்து கொள்ள வேண்டும்.
திரைப்படங்களும் காமெடியும் இந்த காலகட்டத்திற்கு மாறிவிட்டது என்பதை பல புதிய திரைப்படங்களைப் பார்த்து தெரிந்து கொண்டிருந்தால் இப்படி ஒரு பேய் மாமா வை அவர் கொடுத்திருக்க மாட்டார்
பத்துமடை பங்களா மற்றும் அதைச் சுற்றியுள்ள 100 ஏக்கர் தோட்டத்தைச் சுற்றி நகரும் ஒரு கதைதான் பேய் மாமா.
அந்த இடத்தை நல்ல விலைக்கு விற்கத் துடிக்கிறார்.
அந்த தோட்டத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட ஒருவர்.
அந்த இடத்தையும், அங்கு கிடைக்கும் மூலிகைகளையும் வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒருவர்.
அதை வாங்க வருபவர்களை பயங்கரமான பேய் கதைகளைக் சொல்லி விரட்டி அடிக்கிறார்.
திருட்டையே தொழிலாகக் கொண்ட கதாநாயகன் யோகிபாபுவும் அவரது குடும்பத்தினரும் அந்த பேய் பங்களாவுக்குள் மாட்டிக் கொள்ள நேரிடுகிறது.
அந்த வீட்டில் இருக்கும் பேய்கள் அந்த பங்களா பற்றியும், 100 ஏக்கர் மூலிகை பற்றியும் உண்மையைச் சொல்ல, அந்த பேய்களுக்கு உதவ முன் வருகிறது.
கதாநாயகன் யோகிபாபு. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த டேய் மாமா திரைப்படத்தில் மீதிக் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகிபாபு, தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார்.
வசனம் இல்லாத இடங்களிலும் வசனங்களை பேசி அசத்தி இருக்கிறார் கதாநாயகன் யோகிபாபு.
ரஜினிகாந்தின் சந்திரமுகி மற்றும் பேட்ட பட சாயலில் அறிமுகமாகிறார் கதாநாயகன் யோகிபாபு.
பல்வேறு திரைப்படங்களில் பல காட்சிகளை எடுத்து அதில் தன்னுடைய பாணியில் வசனங்கள் இல்லாத இடத்தில் வசனங்களை பேசி நடித்திருக்கிறார்.
இது ஒரு கட்டத்தில் படம் பார்க்கும் நம்மை நம்மிடம் சலிப்பை ஏற்படுத்துகிறது.
எப்போதோ ஒரு வசனத்தை மட்டும் நகைச்சுவையாகப் பேசிவிட்டால் போதாது என்பதை யோகி பாபு புரிந்து கொள்ள வேண்டும்.
மற்ற கதாபத்திரங்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
கதாநாயகன் யோகி பாபுதான் படத்தின் நாயகன் என்றதும் படம் முழுவதும் சிரிக்க வைப்பார் என்றால் ஏமாற்றம்தான்.
தனக்காக நகைச்சவை வசனங்களை எழுத அவர் தனி குழு வைத்திருக்கிறாரா இல்லையா எனத் தெரியவில்லை.
சீக்கிரமே அப்படி ஒரு குழுவை உருவாக்கி கூட்டணி அமைத்தால்தான் அவருக்கு நல்லது.
படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியிலும் நிறைய பேர் உள்ளார்கள். காமெடி வரவில்லை.
காமெடி காட்சிகள் என பலவற்றைச் சேர்த்து நமது பொறுமையை சோதிக்கிறார்கள்.
கதாநாயன் யோகிபாபு பலரை திட்டும் காட்சிகள் கடுப்பை ஏற்படுத்துகிறது.
பழைய சினிமாக்கள், விளம்பரங்கள், யு டியுப் விமர்சகர்கள் என பலரையும் கிண்டலடிக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.
சினிமாவை மட்டும் யாரும் கிண்டல் செய்து விமர்சிக்கக் கூடாது.
ஆனால், சினிமாவை இயக்குனர்கள் ஆகிய நாங்கள் மட்டும் பலரையும் கிண்டல் செய்து விமர்சிப்போம் என்பது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.
ராஜ் ஆர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதமாக இல்லை .
பின்னணி இசையையும் ஓரளவிற்கு கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒளிப்பதிவில் எம்.வி.பன்னீர்செல்வம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
வடிவேலு பேசிய ஹிட் வசனங்களை வைத்து ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்கள்.
இயக்குனர்
ஷக்தி சிதம்பரம்
படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் டிவி சீரியல்களில் வருவதைப் போல இருக்கிறது.
இயற்கை மருத்துவம், கொரானோ தாக்கம், பேய் பங்களா, என சமீபத்தில் நிஜத்திலும், சினிமாவிலும், டிவியிலும், வாட்சப்களிலும் பகிரப்படும் பல விஷயங்களை வைத்தே ஒரு படத்தை உருவாக்கிவிட்டார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.
இந்த பேய்மாமா திரைப்படத்தில் முதலில் வடிவேலுதான் கதாநாயகன் நடிக்க இருந்தார்.
ஆனால் இந்த பேய்மாமா திரைப்படத்தில் வடிவேலு அவர்கள் நடித்திருந்தால் ஏற்கனவே நான்கு வருடங்களுக்கு சினிமாவில் இருந்து ஒதுங்கி லாக் டவுன் ஆனதுபோல் வாழ்க்கை முழுவதும் லாக் டவுன்
ஆகியிருக்கும்.
ஏதோ வடிவேலு நல்லகாலம் ஏதோ புண்ணியம் செய்து இருக்கிறார்.
ஆகையால் இந்த பேய்மாமா திரைப்படத்தில் நடிக்கவில்லை
மொத்தத்தில் ‘பேய் மாமா’ இல்லை இது நா மாமா சிரிக்க வைக்க முடியல மாமா.