பைக் ரேஸராக மாறிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர் லோக்கல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அடுத்ததாக தற்போது மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பைக் ரேஸராக நடித்து வருகிறார். இதற்காக பிரத்யேக பைக் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் எல்லாம் செய்தது மட்டுமன்றி, கொஞ்சம் உடலமைப்பை மாற்றியுள்ளார் சமீபத்தில் இவர் நடித்த பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்றையும் படமாக்கியுள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும், இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.