பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிப்பது பெருமைக்குரியது – பிரபல நடிகை

மணிரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘பொன்னியின் செல்வம்’ படத்தில் பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யாராய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது எப்போதுமே மிகவும் சிறப்பான தருணம் என்றும், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிப்பது மிகவும் பெருமைக்குரியது எனவும் அவர் கூறினார்.