பொன்னியின் செல்வன்’ படத்தில் நயன்தாராவுக்கு பதில் அனுஷ்கா

‘இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 2 பாகமாக உருவாகும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், இந்த நாவலில் வரும் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் ‘தளபதி 63’, ‘தர்பார்’ ஆகிய படங்களில் நடித்து வருவதால், நயன்தாராவிற்கு பதிலாக நடிகை அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.