பொன்னியின் செல்வன்’ பற்றி மனம் திறந்த பிரபல நடிகை

‘தமிழ் இலக்கியத்தில் பெரிதும் கொண்டாடப்படும் வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக உருவாகவுள்ளது. இதனை இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ளார். இந்நிலையில் சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் தான் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் மீண்டும் எனது குரு மணிரத்னம் உடன் பணியாற்றவிருப்பதில் மிகவும் ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே பெரிய பழுவேட்டறையர் கதாபாத்திரத்தின் மனைவியான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.