போதையேறி புத்திமாறி படத்தின் கதையைச் லீக் செய்த நாயகி

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத்லேப்-ல்  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது

போதையேறி புத்திமாறி என்ற டைட்டிலிலே இப்படத்தை கவனிக்க வைத்துள்ளது. இப்படத்தின் ஜானர் சும்மா ஒரு காமெடியில் அடங்கி விடுவதைப் போல தெரியும். ஆனால் படத்தின் ட்ரைலரைப் பார்க்கும் போது நிச்சயம் இது திரில்லர் வகைப் படம் என்பதை யூகிக்க முடிகிறது. மேலும் நேற்று படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் நாயகி பேசும்போது, “நாளைக்கு கல்யாணத்தை வைத்துக் கொண்டு இன்று நண்பர்களை ஹீரோ சந்திக்கப் போகிறார் அங்கு நடக்கும் பிரச்சனைகள் தான் இப்படத்தின் கதை” என்று படத்தின் எதிர்பார்ப்பை கூட்டினார். அவர் சொன்னதை வைத்துப் பார்க்கும் போது நிச்சயம் ஒரு திரில்லர் படம் என்றே யூகிக்க முடிகிறது. இந்தப் படத்தின் ப்ரஸ்மீட்டில் ஒரு சிறப்பான சம்பவம் நடந்தது. அது படத்தில் உழைத்த டெக்னிஷியன்ஸ்களின் உதவியாளர்கள் அனைவரையும் மேடை ஏற்றியது. படம் வெளிச்சம் பெறுவதற்காக உழைத்தவர்களுக்கு ஒரு வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எல்லோரையும் மேடைக்கு அழைத்து பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். இது பலரையும் நெகிழ வைத்தது. பெரும்பாலான பட விழாக்களில் உதவி இயக்குநர்களை மட்டும் தான் மேடை ஏற்றுவார்கள். ஆனால் இந்தப்பட விழாவில் கேமராமேன் உதவியாளர்கள், எடிட்டர் உதவியாளர்கள் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியாளர்களையும் மேடைக்கு அழைத்தார்கள். இப்படி படத்தின் முதல் ப்ரஸ்மீட்டே பாஸிட்டிவாக அமைந்ததால் படக்குழு செம்ம உற்சாகத்தில் இருக்கிறது. சரி அப்படியே படமும் உற்சாகத்தைத் தரட்டும்

அனைத்து டெக்னீஷியன்களும் மேடை ஏறியது மிக மிக மகிழ்ச்சி தருகிறது படமும் இதே போல்  மக்களுக்கு மகிழ்ச்சி தர வேண்டும்