போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்தார் சிறுத்தை சிவா

  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ரஜினிகாந்த் அதிரடி வேடத்தில் நடிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மே 29ந் தேதி துவங்குகிறது. இந்த நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் இயக்குநர் சிவா, போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். இவர்களது சந்திப்பு சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக நடந்துள்ளது. எனவே ரஜினி, சிவா கூட்டணி விரைவில் இணைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.