போலீசாகும் அமலாபால்

அறிமுக இயக்குனர் அனுஷ் பிள்ளை இயக்க உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார் அமலாபால். இது புலனாய்வு திரில்லர் கதையாக உருவாகிறது. கேரளாவில் போலீஸ் அதிகாரியாக இருந்த சர்ஜன் உமாநாதன் என்பவர் கையாண்ட வழக்கு ஒன்றை மையப்படுத்தி இந்த கதை உருவாகியுள்ளது. இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் அமலாபால் நடிக்க இருக்கிறார்.

‘ஆடை, அதோ அந்த பறவை போல’ ஆகிய படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் அமலா பால், தொடர்ந்து அதுபோல் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்கவே விரும்புகிறார். இதிலும் அவரது கேரக்டருக்கே முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் இந்த படம் உருவாகிறது.