மகாநடி’ (தமிழில் நடிகையர் திலகம்) திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் 

வைஜயந்தி மூவீஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா தயாரிப்பில் , நாக அஷ்வின் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மகாநடி‘
(தமிழில் நடிகையர் திலகம்) திரைப்படம் தேசிய அளவில் மூன்று விருதுகளை வென்றிருக்கிறது.

தென்னிந்தியா திரையுலகின் மறக்க முடியாத நடிகையாக, இன்றளவும் தனது கதாபாத்திரங்களுக்காகவும், தனது நடிப்பு திறனுக்காகவும் அன்போடு நினைவு கூறத்தக்க நடிகை சாவித்ரியின் வாழ்க்கையே இப்படம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரான இப்பாடத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் கனகச்சிதமாக நடித்திருந்தார்.

இப்படத்திற்கு சிறந்த நடிகை (கீர்த்தி சுரேஷ்), சிறந்த உடையலங்கார வடிவமைப்பு, மற்றும் சிறந்த திரைப்படம் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருக்கிறது. 

இம்மகிழ்ச்சியான தருணத்தில், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், தேசிய திரைப்பட விருதுகள் இயக்குனரகம், ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் தனது ஆத்மார்த்தமான நன்றியை இப்படக்குழு தெரிவித்துக் கொள்கிறது.