மகாபாரதம்’ இயக்கும் ஆசையில் அடுத்த இயக்குனர்.
இந்தியாவின் பெரும் இதிகாசங்களில் ஒன்றான ‘மகாபாரதம்’ படத்தை படமாக்க வேண்டும் என்ற ஆசையில் இந்தியாவின் சினிமா பிரபலங்கள் சிலர் இருக்கிறார்கள். ‘பாகுபலி’ படத்தைத் தந்த ராஜமௌலி, இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான ஆமிர்கான் ஆகியோர் ‘மகாபாரதம்’ படத்தை எதிர்காலத்தில் எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்கள். மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிக்க மகாபாரதம் கதையைப் படமாக்கப் போவதாக அறிவித்து அதன்பின் கைவிட்டார்கள்.
இப்படி, இதற்கு முன் வந்த மகாபாரதம் படம் பற்றி அறிவிப்புகளும், ஆசைகளும் ஒரு புறமிருக்க ‘ரங்தே பசந்தி, பாக் மில்கா பாக்’ படங்களை இயக்கிய ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, மகாபாரதம் கதையைப் படமாக்க ‘மகாபாரத் – தி கிரேட்டஸ்ட் பேட்டில் எவர் பாட்’ (Mahabharat: The Greatest Battle Ever Fought) என்ற தலைப்பை இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் அசோசியேஷனில் பதிவு செய்துள்ளார்.
இவராவது மகாபாரதம் கதையைப் படமாக்குவாரா அல்லது இதுவும் ஆரம்பக் கட்டத்திலேயே நின்று விடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.