Movie Wingz
திரை விமர்சனம்

மகாமுனி – திரை விமர்சனம்

நடிப்பு – ஆரியா. மகிமா நம்பியார். இந்துஜா. ரோகிணி. ஜெயபிரகாஷ். இளவரசு. மற்றும் பலர்

தயாரிப்பு –ஸ்டுடியோ கிரீன் K.E.ஞானவேல்ராஜா

இயக்கம் – சாந்தகுமார்

இசை – எஸ்.எஸ்.தமன்

மக்கள் தொடர்பு – யுவாராஜ்

வெளியான தேதி – 06 செப்டம்பர் 2019

ரேட்டிங் – 3.25/5

அருள்நிதியை வைத்து மெளனகுரு படத்திற்கு பிறகு சுமார் 8 ஆண்டுகளுக்கு பின் ஆரியா நடிப்பில் ‘மகாமுனி’யை இயக்கியுள்ளார் இயக்குனர் சாந்தகுமார்.

ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் இரண்டு வேடங்களில் நடிக்கும் கதை தமிழ் சினிமாவில் எத்தனையோ முறை வந்து போயிருக்கிறது. இந்தப் படமும் ஒரு கதாநாயகன் இரு வேடங்களில் நடிக்கும் கதைதான். ஆனால், அதை வேறு ஒரு ரசனையுடன் நல்ல திரைக்கதையுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்.

இரு வேடப் படங்களில் பொதுவாக ஒருவர் நல்லவராக இருப்பார், மற்றொருவர் கெட்டவராக இருப்பார். அதே வழக்கமான பார்முலா இந்தப் படத்திலும் இருக்கிறது. இருந்தாலும் இரண்டு கதாபாத்திரங்களின் தன்மையையும் புதிதாக அமைத்திருக்கிறார் இயக்குனர். சாந்தகுமார்
படத்தின் கதையைவிட திரைக்கதை நகரும் விதம்தான் படத்திற்கு முதுகெலும்பாக உள்ளது

இந்த மகாமுனி படத்தில் எடுத்த விதத்தில் மிகவும் அருமையாக மேக்கிங் செய்துள்ளார்
இயக்குனர் சாந்தகுமார்.

கதாநாயகன் ஆர்யா இரண்டு கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்.

ஒரு கதாபாத்திரமான (ஆரியா) மகா, கால் டாக்சி டிரைவராக காஞ்சிபுரத்தில் உள்ள கிராமத்தில் தனது மனைவி, மகன்(ஆறு வயது) உடன் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது, லோக்கல் அரசியல்வாதி இளவரசுக்காக சிலரை கொலை செய்ய திட்டம் (Sketch) போட்டு கொடுக்கும் வேலையும் பார்த்து வருபவர் இந்த மகா.

மற்றொரு கதாபாத்திரமான ( ஆரியா )முனி, ஈரோடு
மாவட்டத்தில் தனது தாய் ரோகிணியுடன் வாழ்ந்து வருபவர். டிகிரி படிப்பை முடித்துக் கொண்டு இயற்கை விவசாயமும், விதைப் பந்து போடுவது, மலைகளுக்குச் சென்று டியுஷன் எடுப்பது
சேவையாக, செய்து வருகிறார் சுவாமி விவேகானந்தர் வழியில் துறவி வாழ்க்கையையும் மேற்கொள்ள நினைக்கும் தூய மனசுக்கு சொந்தக்காரர்தான் முனிராஜ்

கதாநாயகன் ஆர்யா மீது அதே ஊரைச் சேர்ந்த மகிமா நம்பியாருக்கு காதல். கதாநாயகன் ஆர்யாவின் சாதியைச் சொல்லி அந்த காதலுக்கு எதிராக இருக்கிறார் மகிமா நம்பியாரின் அப்பா ஜெயப்பிரகாஷ். அவர் கதாநாயகன் ஆர்யாவைக் கொலை செய்ய திட்டம் போட்டு தோற்கிறார்.
ரவுடி கதாநாயகன் ஆர்யா போலீசிடமிருந்து தப்பித்து ஈரோடு பக்கம் வர, பக்திமான் ஆர்யாவை, ரவுடி ஆர்யா என போலீஸ் கைது செய்கிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மகாமுனி திரைப்படத்தின் பலமே கதாபாத்திரத்தின் வடிவமைப்பு. ஒவ்வொரு சிறிய கதாபாத்திரத்தைக் கூட அதன் முழு தன்மை வெளிப்படும் விதத்தில் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார். வீட்டு வேலைக்காரன் முதல் கதாநாயகன் கதாநாயகி வரை அந்த ஒரு நுணுக்கம் கதாபாத்திரங்களில் வெளிப்படுகிறது.

குறிப்பாக கதாநாயகன் ஆர்யாவின் இரண்டு வேடக் கதாபாத்திரங்களின் செதுக்கிய விதம் அருமை. அதில் முனி கதாபாத்திரத்தில் கதாநாயகன் ஆர்யாவின் நடிப்பு அந்த கதாபாத்திரத்தை அப்படியே உள்வாங்கி கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார்.

இயக்குனர் பாலா இயக்கிய நான் கடவுள் படத்தின் அகோரி ருத்ரன் கதாபாத்திரத்திற்குப் பிறகு ஆர்யா இந்த படத்தில் முனி கதாபாத்திரத்தில் தான் மீண்டும் தன் முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். மகா என்கிற கொலை செய்யும் ரவுடி கதாபாத்திரத்திலும் இயல்பாய் நடித்திருக்கிறார். அழகான மனைவி, அன்பான மகன் என இருப்பவர் ஏன் கொலை செய்வதைத் தொழிலாக எடுத்தார் என்பதை பிளாஷ்பேக்கிலாவது காட்டியிருக்கலாம்.

தமிழ் திரைப்பட உலகில் பல கதாநாயகிகள் வருகிறார்கள் போகிறார்கள். ஆனால், அவர்களது திறமையை என்ன என்பதை எத்தனை இயக்குனர்கள் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது கேள்விதான். இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்துஜா, மகிமா நம்பியார் இருவரின் நடிப்புத் திறமையை இந்த மகாமுனி திரைப்படம் வெளிக் கொண்டு வந்திருக்கிறது.

கணவனை எட்டி உதைத்தும் கூட அன்பு செலுத்தும் மனைவியாக இந்துஜா. பல கொலைகளைச் செய்யும் கணவன் என்று தெரிந்திருந்தும் அவர் மீது உள்ள அதிக பாசம் அவருக்கு சிறிதும் குறையவில்லை. தன்னை தவிக்க விட்டு சென்று விடுவாரோ என பேருந்து நிறுத்தத்தில் பார்த்து பயந்தது பதறுவதும், பேருந்தில் ஏறிய பின்னும், கணவனை திரும்பித் திரும்பி பார்த்து தவிப்பதும் இன்னும் கண்முன்னே நிற்கிறது.

தந்தைக்கும், தாய்க்கும் அடங்காத கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண்ணாக மகிமா நம்பியார். படத்தில் அடிக்கடி கருப்பு சட்டை தான் அணிந்து வருகிறார். தந்தை மீது மிகவும் வெறுப்புடன் இருப்பவர். ஆர்யாவைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார். தங்கள் காதலை வெளியில் சொல்லிக் கொள்ளாமலேயே அவரும் கதாநாயகன் ஆர்யாவும் காதலுடன் பழகுகிறார்கள். ஆர்யாவைப் பார்த்து மகிமா நம்பியார் சிரிக்கும் சிரிப்பில் அவ்வளவு காதல் தெரிகிறது.

வில்லன்கள் என்று சொல்ல முடியாத அளவிற்கு வில்லத்தனமான கதாபாத்திரங்களாக இளவரசு, ஜெயப்பிரகாஷ். இளவரசு போட்டி அரசியல்வாதியைக் கொல்லும் அளவிற்கு அரசியல் வெறி பிடித்தவர். போல் இளவரசு நடித்துள்ளார் ஜெயப்பிரகாஷ் சாதி வெறி பிடித்தவர். நடித்துள்ளார் இருவரது கதாபாத்திரங்களிலும் சினிமாத் தனம் இல்லை.

எஸ்.எஸ் தமன் இசையில் பாடல்களை விட பின்னணி இசை தனி தன்மையாக ஒலிக்கிறது. ஒவ்வொரு காட்சியின் தன்மைக்கேற்றபடி தன் இசையாலும் அந்தக் காட்சியின் தாக்கத்தை அதிகப்படுத்துகிறார்
எஸ்.எஸ்.தமன்.

அருள் பத்மநாபன் ஒளிப்பதிவும், மிகவும் அருமை இயற்கை மலைப் பிரதேசங்கள் அருமையாகப் படம் பிடித்து காண்பித்துள்ளார்.
VJ.சாபு ஜோசப் படத் தொகுப்பும், காட்சியை மிக அருமையாக கையாண்டிருக்கிறார்

ரெம்போன் பால்ராஜ் கலை இயக்கமும் படத்திற்கு கூடுதல் பலத்தைக் கொடுத்திருக்கின்றன. நிகழ்கால அரசியலை ஆங்காங்கே கிண்டலடிக்கிறது வசனங்களும் அருமை.

படத்தில் சண்டைக்காட்சிகள் உண்மையில் ஊருக்குள் எப்படி நடக்குமோ அதேபோல் கலவரமும் சண்டை காட்சியும் மிக அருமையாக கையாண்டிருக்கிறார் ஆக்ஷன் பிரகாஷ்

படத்தின் நீளம் கொஞ்சம் பொறுமையை சோதிக்கும். கதை சொல்லலில், காட்சிகள் நகர்தலில் ஒரு மாற்றத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். சாந்தகுமார் அதே சமயம் இரண்டாம் பாதியில் படம் கொஞ்சம் சுவாரசியமற்று நகர்கிறது. அதில்தான் முக்கிய திருப்பங்கள் இருக்கின்றன. இருந்தாலும் அதில் கொஞ்சம் விறுவிறுப்பை அதிகப் படுத்தி இருக்கலாம். வழக்கமான படங்களிலிருந்து ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும் இந்த மகாமுனி.

மகாமுனி – தமிழ் சினிமாவில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறது
நல்ல படம் கண்டிப்பாக பார்க்கவும்

Related posts

மெஹந்தி சர்க்கஸ் – திரை விமர்சனம்

MOVIE WINGZ

ஜாம்பி – திரை விமர்சனம்

MOVIE WINGZ

உறியடி 2 – திரை விமர்சனம்

MOVIE WINGZ