மகிழ்ச்சியில் பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி !

கேரளாவை சேர்ந்த பிரபலமான பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி.பார்வையற்றவரான இவர் பிருதிவிராஜ் நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் இடம்பெற்ற காற்றே காற்றே என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.பின்னர் விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி’ படத்தில் இடம் பெற்ற ‘சொப்பன சுந்தரி நான் தானே’ பாடல் அவரை மேலும் பிரபலப்படுத்தியது.அதன் பின் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற பாடல்களை பாடியுள்ளார்.

இதற்கிடையில்,வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை சினிமா படமாகிறது.இதில் வைக்கம் விஜயலட்சுமி கதாபாத்திரத்தில் கேரளாவில் மீன் விற்று படித்து பிரபலமான ஹனன் நடிக்கிறார்.இந்நிலையில் தனக்கு பார்வை கிடைக்கப்போவதாக விஜயலட்சுமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கண்பார்வை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டே இருந்தேன்.இதற்காக நிறைய பரிசோதனைகள் செய்து சிகிச்சைகள் எடுத்துக்கொண்டேன்.அமெரிக்காவில் டாக்டர்கள் நவீன டெக்னாலஜி மூலம் சிகிச்சை அளித்தார்கள்.அடுத்த வருடம் எனக்கு பார்வை வந்துவிடும் என்று சொல்லி இருக்கிறார்கள்.இப்போது எனக்கு வெளிச்சத்தை உணர முடிகிறது” என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.