மக்களவை தேர்தல் முடிவு – கமலை கேலி செய்யும் தயாரிப்பாளர்

நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களை பிடித்துள்ளது. தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் முதன்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 3வது அல்லது 4வது இடங்களை பிடித்தது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான சி.வி.குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் “போ… போ… எல்லாம் முடிஞ்சருச்சு போ … உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ பாக்கலாம் போ…” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக தேர்தல் பிரசாரத்தின் போது பழைய அரசியல்வாதிகளின் பெயர்களை கூறும் போது கோபமாக கமல் அங்கிருக்கும் டிவியை உடைப்பது போன்ற காணொளியை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சி.வி.குமார் பதிவு செய்திருக்கும் ட்வீட் இணைப்பு👇🏽