மக்கள் காட்டிய அனுதாபத்தால் தேர்தலில் கூட ஜெயிப்பேன் ; களவாணி 2 வில்லன் துரை சுதாகர் பூரிப்பு..!

இந்த படத்தில் வில்லனாக நடித்த துரை சுதாகர் பேசும்போது, 
 
“நான் நடிக்க வந்து கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகின்றன. இவ்வளவு நாள் கஷ்டப்பட்டதற்கு எனக்கு இந்த வெற்றிப்படத்தில்  ஒரு நல்ல  கதாபாத்திரம் கொடுத்து ஒரு நல்ல களம் அமைத்துக் கொடுத்து என்னை ஒரு நடிகனாக நிலை நிறுத்தி இருக்கிறார் இயக்குனர் சற்குணம்.. விமல், ஓவியா நடித்து வெற்றி பெற்ற களவாணி படத்தை ஒரு ரசிகனாக பார்த்து ரசித்த எனக்கு அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றே சொல்வேன்.. பத்து படத்தில் நடித்து இருந்தால் கூட இந்த அளவிற்கு எனக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான்.. இயக்குனர் சற்குணம் மட்டுமல்லாது, இளவரசு, சரண்யா பொன்வண்ணன் இருவருமே என்னை ஊக்கப்படுத்தினார்கள்.. படத்தில் நான் வில்லன் என்றாலும் கதையை பொறுத்தவரைக்கும் நான் தான் ஹீரோ.. நிறைய பேர் படம் பார்த்து விட்டு வெளியே செல்லும் போது என் மீது பரிதாபப்பட்டுக் கொண்டே சென்றார்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் நான் போட்டியிட்டால் இந்த அனுதாப அலை மூலம் ஜெயித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என கூறினார்.

வினியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் பேசும்போது, 

 
“விமல் படங்கள் என்றாலே தயாரிப்பில் இருந்து வெளியீடு வரை எனது பங்களிப்பு இருக்கும். இந்த நிகழ்ச்சியில் வைத்து விமலை சந்தித்து தங்களது அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் கொடுப்பதற்காக தயாரிப்பாளர்கள் தேடி வந்துள்ளார்கள். அந்த அளவிற்கு விமலின் மார்க்கெட் சீராக உள்ளது.. முன்னனி நடிகர்கள் சிலரின் படங்களே சேனல்களில் விலைபோகாமல் இருக்கும் நிலையில் களவாணி 2 படத்தின் ஒலிபரப்பு உரிமையை ஜீ தமிழ் சேனல் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்கள் என்றால் இது மிகப்பெரிய விஷயம்… இந்த பத்து வருடங்களில் நான் ஓரளவுக்கு லாபம் சம்பாதித்தேன் என்றால் அது இந்த களவாணி 2 படத்தின் மூலமாகத்தான்.. இதையடுத்து விமல் நடிக்கும் புதிய படத்தை நானும் இசையமைப்பாளர் ஜான் பீட்டரும் இணைந்து தயாரித்து வருகிறோம்” என கூறினார்