மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு.

மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் துக்ளக் தர்பார்.

இந்த திரைப்படத்தை இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார்.

வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தில் இசையமைத்த கோவிந்த வசந்தா இந்த துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் நடித்து வருகிறார்.

இந்த துக்ளக் தர்பார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர். பார்த்திபன் நடிக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் திரைப்படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு வசனங்களை எழுத, 96 திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரேம்குமார், இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை ஜூலை மாதம் 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.