மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின்  படத்தில் இணையும் சச்சின் தெண்டுல்கர்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் அவர் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த படத்தில் இணைவார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சச்சின் தெண்டுல்கர் நடிப்பார் என கூறப்படுகிறது. முத்தையா முரளிதரனும், சச்சினும் மைதானத்தையும் தாண்டி நெருக்கமான நண்பர்கள் என்றும், இவர்களது நட்பு மற்றும் களத்தில் ஏற்பட்ட போட்டி ஆகியவை குறித்த சில காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாகவும் அதில் சச்சினே நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்ப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதி நடிக்கும் இந்த படத்தை ஸ்ரீபதி என்ற இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த கனிமொழி படத்தை இயக்கியவர். ராணா டக்குபாய் மற்றும் சுரேஷ் புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருகிறது.