மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

பிஜு விஸ்வநாத் – விஜய் சேதுபதி கூட்டணியில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. இந்த படத்தை விஜய் சேதுபதி தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். இதனை தொடர்ந்து பிஜு விஸ்வநாத்தின் அடுத்த படத்தையும் விஜய் சேதுபதி தயாரித்து வந்தார். இந்நிலையில் இந்த படத்திற்கு ‘சென்னை பழனி மார்ஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை எழுதும் பணியில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். ஆனால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற 22ம் தேதி வெளியாகவுள்ளது.