மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பது எனக்கு பெருமை – முத்தையா முரளிதரன்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. இதில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ளதாகவும் தார் மோஷன் பிக்‌ஷர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பது தனக்கு பெருமையாக இருப்பதாக முத்தையா முரளிதரன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.