மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்தின் அப்டேட்.

விஜய் சந்தர் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ‘சங்கத்தமிழன்’ என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கதாநாயகிகளாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி,மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் விவேக்-மெர்வின் இணைந்து இசையமைக்கும் இந்த படத்தில் “சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான்” என்ற பாடலை இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் பாடியுள்ளார்.