மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தின் அப்டேட் .*

நடிகர் விஜய் சேதுபதி தற்போது சுமார் 6க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா கோபிநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்தப் படத்தில் நாயகியாக நடிகை அமலாபால் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க நடிகை மேகா ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இசை த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் முன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.