Monday, January 18
Shadow

மக்கள் பிரச்னை அதிகம் இருக்க ரஜினிகாந்த் நடிகர் விஜய்யை பற்றி மக்களவையில் பேசிய தயாநிதி மாறன்

மக்கள் பிரச்னை அதிகம் இருக்க ரஜினிகாந்த் நடிகர் விஜய்யை பற்றி மக்களவையில் பேசிய தயாநிதி மாறன்

கடந்த சில நாட்களாக ரஜினிகாந்தின் பெரியார் பேச்சு, வருமான வரித்துறை விலக்கு, நடிகர் விஜய் வீட்டில் ஐடி ரெய்டு குறித்தே மீடியாக்கள் விவாதித்து வருகின்றன.

இதனால் கொரனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு கூட மக்களிடையே இல்லை.

இந்த நிலையில் இன்று மக்களவையிலும் தி.மு.க எம்.பி தயாநிதிமாறன் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் குறிதுது கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவையில் பேசிய தயாநிதிமாறன், “ரஜினிகாந்துக்குக் கிடைத்த வரிச்சலுகை நடிகர் விஜய்க்கு கிடையாதா?, தமிழகத்தில் தேர்தல் வருவதால் ரஜினிகாந்துக்கு வரிச்சலுகை அளித்துள்ளது வருமான வரித்துறை.

தமிழ், தமிழ் என பேசும் மத்திய அரசு அதன் வளர்ச்சிக்காக எதையும் செய்துவிடவில்லை.

ஆனால் செத்தமொழியான சமஸ்கிருதத்துக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவு செய்கிறது” என பேசினார் தயாநிதி மாறன்.

CLOSE
CLOSE