மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஒரே நிமிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அகற்றப்படும் ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கவுதம சிகாமணிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்செய்தார். அப்போது அவர்”மத்திய, மாநில அரசுகளை அகற்ற வேண்டும் என்ற உறுதியை மக்கள் ஏற்றுள்ளார்கள்” என்று கூறினார். மேலும்”மோடி ஒரு சர்வாதிகாரி. எடப்பாடி பழனிசாமி ஒரு உதவாக்கரை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஒரே நிமிடத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு அகற்றப்படும் என்று உறுதியளித்தார் தொடர்ந்து பேசிய அவர், வன்னியர் சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு அளித்தவர் கலைஞர் என்று 2006-ல் ராமதாஸ் பாராட்டியதை சுட்டிக்காட்டி “வன்னியர் சமுதாயத்தினருக்கு திமுக என்ன செய்தது⁉என்று தற்போது ராமதாஸ் கேள்வி கேட்பது வேடிக்கையாக உள்ளது. அரசியல் நாகரிகம் இல்லாமல் ராமதாஸ் பேசுகிறார் சாதி, மதத்தின் பெயரால் அரசியல் லாபம் பெற நினைப்பவர்களுக்கு ஏப்ரல் 18ம் தேதி மக்கள் தக்க பதிலடி தருவார்கள்” என்று கூறினார். திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக கூறிய அவர், விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச தினக்கூலி, எம்.எஸ்.சாமிநாதன் குழு அறிக்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாயிகள் கடன் தள்ளுபடி, தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்