மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் இலவச சினிமா பயிற்சி

சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகமும், மத்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும் இணைந்து ஒரு மாத கால இலவச திரைப்பட பயிற்சி அளிக்கவுள்ளது. இந்த பயிற்சியில் 18 வயது முதல், 45 வரையிலானவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் சேர குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தை 📞044-2819 1203 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.