மனைவி மனம் புண்படக்கூடாது என்பதால் ஷ்ரத்தாவுக்கு உதட்டு முத்தம் தர மறுத்த ஹீரோ

ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் ஹீரோவாக நடித்தவர் நானி. தற்போது தெலுங்கு படங் களில் இளம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். ஜெர்ஸி என்ற புதிய படத்தில் நடித்து வரும் நானிக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் நெருக்கமான காட்சி வெளியிடப்பட்டது. அதில் ஷ்ரத்தாவின் உதட்டு மீது உதடு வைத்து முத்தம் தருவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் உதட்டு முத்தம் தர மறுத்த நானி, ஷ்ரத்தாவின் கன்னத்தில் முத்தமிட்டு நடித்திருந்தார். நடிகைக்கு நானி உதட்டு முத்தம் தராததற்கு அவரது மனைவிதான் காரணமாம். ஏற்கனவே இந்தியிலிருந்து ரீமேக் ஆன, ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் வாணி கபூருக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்து நடித்திருந்தார். அந்த காட்சியை பார்த்த நானியின் மனைவி டென்ஷன் ஆகிவிட்டார்.

தன் கணவர் வேறு ஒரு பெண்ணுக்கு உதட்டில் முத்தம் தருவதா என்று மனம் நொந்து கதறி அழுதுவிட்டார். அதைகண்டு அதிர்ச்சி அடைந்த நானி, இனி லிப் டு லிப் கிஸ் கொடுத்து நடிப்ப தில்லை என்று முடிவு செய்தார். இந்த சம்பவத்தையும் நானியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந் தார். அந்த முடிவின்படித்தான் ஜெர்ஸி படத்தில் ஷ்ரத்தாவுக்கு உதட்டு முத்தம் தராமல் நானி நடித்தார் என்று தெரிவிக்கின்றனர்.