மயூரன் – திரை விமர்சனம்

நடிப்பு – அஞ்சன் தேவ். அஸ்மிதா வேல்ராமமுர்த்தி மற்றும் பலர்
 

தயாரிப்பு –ஃபினாகில் ஃபிலிம் ஸ்டுடியோஸ்

இயக்கம் – நந்தன் சுப்புராயன்

இசை – ஜுபின்

மக்கள் தொடர்பு – மணவை புவன்

வெளியான தேதி – 30 ஆகஸ்ட் 2019

ரேட்டிங் – 2.25/5

 

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நந்தன் சுப்பராயன். இவரது முதல் இயக்கத்தில் வந்துள்ள படம்தான் மயூரன்.

சிறு வயதிலேயே அம்மா அப்பாவை  இழந்த கதாநாயகன் அஞ்சன் தேவ், தனது மாமாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். சிதம்பரத்தில் உள்ள கல்லூரியில் படிக்க செல்லும் அவருக்கு விஜய் டிவி புகழ் அமுதவாணன் பாலாஜி ராதாகிருஷ்ணன் மூன்று பேரும் நண்பர்களாகிறார்கள்.

அந்த பகுதியில் வசிக்கக்கூடிய கதாநாயகி அஸ்மிதாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் கதாநாயகன் அஞ்சன் தேவ். அஸ்மிதாவின் பார்வையிலும் காதல் தெரிவதால் கதாநாயகன் அஞ்சன்தேவ் தனது காதலை துணிவோடு சொல்கிறார். முதலில் மறுக்கும் அஸ்மிதா, பின்னர் வீட்டின் சம்மதத்துடன் கதாநாயகன் அஞ்சன்தேவ் மாமாவுடன் பேசி திருமண நாளையும் முடிவு செய்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அந்த சிதம்பரம் பகுதியில் மிகவும் செல்வாக்கும், மிக்க ஆள் பலமும் பணபலமும் கொண்ட வேல ராமமூர்த்தி கட்டப்பஞ்சாயத்து செய்து தாதாவாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு வலதுகரமாக ஜான் செயல்பட்டு வருகிறார். கதாநாயகன் அஞ்சன்தேவ் தங்கி இருக்கும் கல்லூரியில் வெளிமாநில இளைஞன் ஒருவனை வைத்துக்கொண்டு போதை பொருள் விற்பனை தொழில் செய்து வருகிறார் ஜான்.

ஒரு நாள் கல்லூரி விடுதியில் இருக்கும் ஒரு நாள் நண்பனுக்கு உடல் நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார். அப்போது கேன்சர் நோயாளியின் மெடிக்கல் ரிப்போர்ட் இவருக்கு மாறி வந்துவிடுகிறது.

இதனால் இவருக்கு நோய் என நினைக்கிறார். மேலும் ஒரு பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு போதை பொருளை விற்க முற்படுகிறார்.

தன் நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லாமல் போதை பொருளை எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்.

அதன்பின்னர் இவர் எங்கு சென்றார்? என யாருக்கும் தெரியவில்லை. எங்கே சென்றார்? என்ன ஆனார்? நண்பர்கள் என்ன செய்தார்கள்?

கதாநாயகன் அஞ்சன்தேவ்வின் நண்பனை ஜான்  கொன்று விடுகிறார் இதற்குப் பழிவாங்க  ஜான்யை கதாநாயகன் அஞ்சன்தேவ் கொன்றுவிடுகிறார்.

இதனால் ஜானை கொன்றவனை பழிவாங்க துடிக்கும் வேலராமமூர்த்தி கதாநாயகன்அஞ்சன்தேவ்வை கொலை செய்ய தேடி அலைகிறார். இதிலிருந்து கதாநாயகன் அஞ்சன்தேவ் தப்பித்தாரா? அஸ்மிதாவுடன் காதல் கை கூடியதா திருமணத்தில் ஒன்று சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் அஞ்சன்தேவ் புதுமுகம் என்றாலும் கதாபாத்திரத்தை உணர்ந்து திறம்பட நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், பாடல்களிலும் பரவாயில்லை என்று சொல்லலாம்.

கதாநாயகி அஸ்மிதாவிற்கு படத்தில்  தேவை இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் மனதில் நிற்கிறார். கதாநாயகி அஸ்மிதாவுக்கு பெரிதாக வேலையில்லை. கடைசியில் இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதும் தெரியவில்லை

படத்திற்கு மிகப்பெரிய பலம்
கிராமத்து ஆள் போல கம்பீரம் காட்டி நடித்திருக்கிறார் பெரியவர்
வேலராமமூர்த்தி. தன்னுடைய அனுபவ நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை எல்லாருடைய மனதிலும் நிற்க வைக்கிறார். அவருடைய வலது கரமாக இருக்கும் ஜான்னின் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.நடிப்பும் நச்.  கதாநாயகனின் நண்பர்களாக அமுதவணன், பாலாஜி, ராதாகிருஷ்ணன் கதைக்கு பொருத்தமாக பொருந்தி உள்ளனர்

இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நந்தன் சுப்புராயன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்து பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறார். முதல் பாதி சற்று மெதுவாக நடந்தாலும் இரண்டாவது பாதியில் கதையின் விறுவிறுப்பை கூட்டி ரசிக்க வைத்திருக்கிறார்.

பெரும்பாலும் புதிய முகங்கள் என்றாலும் அவர்களை திறம்பட வேலை வாங்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். படத்திற்கு பரமேஷ்வரின் ஒளிப்பதிவு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ஜுபின் பின்னணி இசை காட்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது.

பாலாவின் சீடர் என்று படத்திற்கு சென்றால் நம்மை ஏமாற்றியிருக்கிறார் நந்தன் சுப்புராயன்

ஏழை குடும்பம், படிப்பு, போதை கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் மாணவர்கள், நண்பனுக்காக போராடும் காட்சி என அருமையாக கதைக்களத்தை கொண்டு செல்ல முடியாமல் தடுமாறியிருக்கிறார் இயக்குனர். நந்தன் சுப்புராயன்

க்ளைமாக்ஸ் நன்றாக இருந்தாலும் அது திடீரென சட்டென முடிவது சரியில்லை.

மொத்தத்தில் ‘மயூரன்’ படம் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.