மற்றோரு நடிகருக்கு வில்லனாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.!

நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தினையடுத்து தற்போது தளபதி விஜய் நடிக்கும் புதிய படத்திலும் வில்லனாக நடிக்கிறார். அடுத்து இன்னொரு தெலுங்கு படத்திலும் வில்லன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு ஏஏ20 என்று பெயர் வைத்துள்ளனர். இதை தமிழிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.