மாநாடு படத்திற்கு இசையமைப்பாளரை உறுதி செய்த இயக்குனர் வெங்கட் பிரபு

சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்க இருக்கும் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யார் என்பதை உறுதி செய்திருக்கிறார்.

சிம்பு கடைசியாக நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனையடுத்து ஹன்சிகாவின் 50 வது படமான “மஹா” படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் சிம்பு இடையிலான காதல் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது

தற்போது இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதை இயக்குனர் வெங்கட் பிரபு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

https://twitter.com/vp_offl/status/1136282448331853826?s=19