மாநில துப்பாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார் நடிகர் அஜித்குமார்

ஒரு நடிகர் என்ற பிரபல அடையாளத்தை விட பல துறைகளில் தன் திறமையை நிரூபித்து வருபவர் நடிகர் அஜித்குமார்

பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் மற்றும் பிரியாணி சமையல் என அசத்தி வருபவர் இவர்.

அண்மையில் தக்‌ஷா குழுவுக்கு ஆலோசராகவும் இருந்தார்.

அந்த குழு ஆஸ்திரேலியாவில் நடந்த யூஏஈ மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.

இந்த நிலையில் 2019ம் ஆண்டுக்கான மாநில துப்பாக்கி சாம்பியன்ஷிப்பில் அஜித்குமார் கலந்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படியே சென்னை ரைபில் கிளப் சார்பில் 25 மீட்டர் பிரிவில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துக் கொண்டுள்ளார்.

அஜித்குமார் கலந்துக் கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.