மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளரின் அடுத்த திரைப்படத்தில் தளபதி நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கதாநாயகனா ..?

தமிழ் திரைப்பட உலகில் தளபதி என்றால் அது ஒரே நடிகர் விஜய் மட்டும்தான்.

நடிகர் விஜயின் மகன் சஞ்சய் வேட்டைக்காரன் என்கிற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியிருப்பார்.

விஜயின் மகன்
தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார்.

இந்த நிலையில், தளபதி நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் (விஜய்யின் உறவினர்) பிரிட்டோ தயாரிப்பில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் இனையத்தில் வெளியானது.

ஆனால் தயாரிப்பாளர் பிரிட்டோ இந்தச் செய்தியை மறுத்துள்ளார்.

மேலும் தான் இதுகுறித்து நடிகர் விஜய்யிடம் தான் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.

இவையில்லாமல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தயாரிக்கவுள்ள திரைப்படத்திலும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.