மாஸுக்கெல்லாம் மாஸ்: இணையத்தை கலக்கிய எஸ் டி ஆர்!
தல அஜித்திற்கு பிறகு மாஸ் என்ற ஒரு பட்டம் கொடுக்க வேண்டும் என்றால் அது சிம்புவிற்காக தான் இருக்கும்.
சிம்புவோட 45வது படத்தை ஸ்டுடீயோ கிரீன் நிறுவனம் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கவிருக்கிறார்.
இப்படத்தில், கெளதம் கார்த்திக் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். நார்தன் என்ற இயக்குனர் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவரே இப்படத்தினை இயக்குகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் சிம்புவின் மாஸ் லுக் ஒன்று இணையத்தில் வெளியாகி மிகப்பெரும் வைரலாகி வருகிறது.