மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கும் வெள்ளி விழா நாயகன் – ஹீரோ யார் தெரியுமா.?

80களில் வந்த திரைப்படங்களில் நடித்து பெண்களின் மனம் கவர்ந்த கதாநாயகனாக வலம் வந்தார் நடிகர் ராமராஜன்

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டுமென்ற ஆசையில் சென்னைக்கு வந்து மிகப்பெரிய நடிகராக ஆக வேண்டும் கனவில் இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக வேலையில் சோர்ந்து பணிபுரிந்தார்.

‘மண்ணுக்கேத்த பொண்ணு’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

அந்த திரைப்படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது அதை தொடர்ந்து ‘மருதாணி’ ‘மறக்கமாட்டேன்’ ‘ஹலோ யார் பேசுறது’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அதன் பிறகு ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் நடிகராக ராமராஜன் கதாநாயகனாக அறிமுகமாகி அந்த முதல் திரைப்படம் 100 நாட்களையும் கடந்து ஓடி வெற்றி விழா திரைப்படமாக அமைந்தது.

அதன்பின் நடிகர் ராமராஜன் ‘கரகாட்டக்காரன்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது.

அந்த வகையில் கரகாட்டக்காரன் திரைப்படமும் திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடி அந்த திரைப்படம் மிக பெரிய வெள்ளி விழா திரைப்படமாக அவருக்கு அமைந்தது.

நடிகர் இயக்குனர் ராமராஜன் இதுவரை  44 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

நடிகர் ராமராஜன் அவர்கள் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் பூஜை போட்ட அன்றே மிக பெரிய வியாபாரம் ஆனது.

இந்நிலையில் நடிகர் இயக்குனர் ராமராஜன் பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக களமிறங்குகிறார்.

இதற்காக இவர் இன்றைய காலகட்டத்திற்கு என்றவாறு ஒரு கதையை தயார் செய்து அந்த கதையை இன்று இருக்கக்கூடிய முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான மக்கள் செல்வன்
விஜய் சேதுபதியிடம் ஒரு கதை சொல்லிருக்கிறார்.

இயக்குனர் ராமராஜன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் ராமராஜன் நடிக்கவில்லை. இயக்குனர் மட்டுமே தொடர்ந்து அவர் திரைப்படங்கள் இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறாராம்.